We use cookies to provide some features and experiences in QOSHE

More information  .  Close
Aa Aa Aa
- A +

'திருமணப் பொருத்தம்' - ஒருவர் வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதது!

5 0 0
14.09.2017

முகூர்த்தமும், நிமித்தமும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கங்கள். அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடனும், அவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால் காணலாம் என்ற குறிப்புடனும் முந்தைய அத்தியாயத்தை முடித்திருந்தேன்.

எந்த ஒரு விஷயத்திலும் உண்மையைத் தேடும் யாரும், பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்பமாட்டார்கள். இதுபோன்ற உணர்தல்கள்தான், என் வாழ்வே என்றாகிப்போன ஜோதிடத்தில் அடுத்தகட்ட ஆய்வுக்கு என்னைத் தயார்படுத்தின.

அந்த ஆய்வில் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்தது குமாரசுவாமியம். அதாவது, ஜோதிடத்தை சரியாக அணுகுவதற்கு குமாரசுவாமியம் என்ற ஜோதிட ஆதி நூலின் பங்கு தவிர்க்கவே முடியாது என்பது என் கருத்து. நானும் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டே ஆய்வுகளை மேற்கொண்டேன்.

ஜாதகத்தில், மேலோட்டமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து, ஒருவரின் தனித்தன்மையை கண்டறிந்து சொல்வதில் கவனம் செலுத்தினேன். என்னைப் பொறுத்தவரை, ஜாதகத்தில் ஒருவரின் தனித்தன்மையை உணர்வதுதான் அடிப்படை. அதைத் தெரிந்துகொண்டால், தன் வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக்கொள்ள முடியும் என்ற புரிதல் அவருக்கு ஏற்படும். எனக்கும், அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களே அமைந்தனர். அவர்கள் எனக்குக் கொடுத்த மரியாதையும், மதிப்பும் என் மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும், ஜோதிட ஆய்வில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள ஒருவித தைரியத்தையும் வைராக்கியத்தையும் கொடுத்தது.

சூழ்நிலைகளைப் பொறுத்தே இன்பமும் துன்பமும். அந்த வகையில், இன்பத்துக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வதும், துன்பத்துக்கான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும் மனிதனின் பொறுப்பு. அதே நேரத்தில், தாய், தந்தை, சகோதர உறவுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது. அது இறைவன் நேரடியாக வழங்கிய உறவுகள். இங்கு மனித அறிவுக்கு வேலை இல்லை. ஆனால், திருமண உறவு என்பது வேறானது. அந்த உறவு சரியாக அமைந்தாலும், சரியாக அமையாவிட்டாலும், அதைத் தேடிக்கொண்டதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அதனால்தான், இரு மனங்களை இணைக்கும் திருமணப் பொருத்தம் என்பது மிகவும் அவசியம் என்பதை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஜோதிடம் வலியுறுத்தும் திருமணப் பொருத்தங்களையே, ஜோதிட சாஸ்திரப் பயன்பாட்டின் மையப்புள்ளியாக நான் கருதுகிறேன். இங்கு இரு மனங்கள் இணைவது, இரு வேறு குடும்பங்கள் இணைவது மட்டுமல்ல, இரு வேறு பாரம்பரிய குணங்களும் ஒன்று கலக்கின்றன. இரு வேறு உறவுகள் இணைந்து புதிய உறவுகளை உருவாக்குகின்றன. அதுவே, இரு வேறு உறவுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது........

© Dinamani