We use cookies to provide some features and experiences in QOSHE

More information  .  Close
Aa Aa Aa
- A +

இயற்கையைக் காப்போம்

0 0 0
12.07.2018

ஒரு நாள் புத்தரின் மாணவர் ஒருவர், தனக்கு உடுத்திக் கொள்ள புதிய துணி ஒன்று வேண்டுமென்று கேட்டார். புத்தரிடம் அவ்வளவு சீக்கிரம் ஒரு புதிய துணி வாங்கிவிடமுடியுமா? புத்தர் அம்மாணவரிடம், உனது பழைய துணி என்னவாயிற்று' என்று கேட்டார். புத்தருடனேயே வாழ்வை நடத்தும் அந்த மாணவர் தயங்காமல் பதிலளிக்கத் தொடங்கினார்.
எனது பழைய துணி கிழிந்து விட்டது. அதனைச் சரியான வடிவத்தில் கத்தரித்து சன்னல்களுக்குத் திரைச்சீலையாக்கிவிட்டேன். ஏற்கனவே திரைச்சீலையாக இருந்த துணியை, அடுப்பிலிருந்து பாத்திரங்களை இறக்கப் பயன்படுத்தும் கந்தல் துணியாக்கி விட்டேன். ஏற்கெனவே கந்தல் துணியாக இருந்ததை வாயிலுக்கு முன்னால் போட்டு வைக்கும் மிதியடியாக மாற்றிவிட்டேன். பயன்பாட்டிலிருந்த மிதியடியை துண்டு துண்டுகளாகக் கிழித்து அடுப்பில் போட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்' என்றாராம். புத்தரும் புன்னகைத்துக்கொண்டே புதியதுணியைப் பெற அனுமதி அளித்தாராம்.
பூமியில் வீசினால் மட்கும் என்ற பருத்தித் துணிக்கே இவ்வளவு பயன்பாடு இருக்கிறது என்பது பலரும் யோசிக்காத கோணமல்லவா? எனவே இச்சம்பவம் பலராலும் அடிக்கடி சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.
ஒரு திரைப்படத்தில் துணை நடிகர் ஒருவர் கதாநாயகியிடம் அண்டா, குண்டா போன்ற பெரிய பாத்திரம் ஒன்றைக் கேட்பார். கதாநாயகி எதற்கு' என்று........

© Dinamani