We use cookies to provide some features and experiences in QOSHE

More information  .  Close
Aa Aa Aa
- A +

தஷ்வந்த்! மிருகங்கள் கொல்லப்பட வேண்டியவையா? கூண்டிலிருந்து திறந்து விடப்பட வேண்டியவையா?

5 1 0
14.09.2017

பட்டப்பகலில் 7 வயதுச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு, அவள் அதை வெளியில் சொன்னால் ஆபத்து என்று கருதி கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அந்தப் பிஞ்சுக் குழந்தையை கொன்று டிராவல் பேகில் எடுத்துச் சென்று புறநகர்ப் பகுதியில் எரித்துக் கொல்லும் அளவுக்கு சைக்கோத்தனமான கொலைகாரனான தஷ்வந்தை, நீதிமன்றம் எப்படி இன்று ஜாமீனில் விடுவித்தது என்று புரியவில்லை. இது முற்றிலும் அநீதியான தீர்ப்பு. மீடியா விழிப்புடன் தான் இருக்கிறது, அதைக் காணும் மக்களும் உயிர்ப்புடன் தான் இருக்கிறார்கள். ஹாஷின் கொலை வழக்கில் நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை அத்தனையும் இதுவரை கண்டு கொண்டிருந்த மக்கள் தஷ்வந்தின் குற்றத்தை மறந்து விடவில்லை. மன்னித்து விடவும் இல்லை. அதனால் இத்தகைய தீர்ப்புகளை வழங்கி விட்டு அதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று மட்டும் யாரும் எளிதாக நினைத்து விடத் தேவையில்லை. அந்தக் குழந்தையின் பெற்றோரது வாழ்நாள் துயரம் தீரவே தீராது எனும் நிலையில் அந்தத் துயரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைகாரனை நீதிமன்றம் திடீரென ஜாமீனில் வெளியில் விட வேண்டிய அவசியம் என்ன வந்தது?.

இந்த வருடத் துவக்கத்தில் ஃபிப்ரவரி 5 ஆம் நாள் தான் ஹாசினியின் பெற்றோரது வாழ்நாள் நிம்மதியைக் காவு வாங்கும் விதமான அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து முடிந்தது. அந்தக் குழந்தையின் அவல மரணம் நடந்து முடிந்து இன்னும் முழுதாக வருடம் திரும்பவில்லை. மக்கள் இப்போதும் ஹாசினியின் மரணத்தை மறந்தார்களில்லை. இப்போதும் பல பெற்றோர் மனதில் நீறு பூத்த நெருப்பாக அந்தக் கொலை பாதகத்தை நிகழ்த்திய தஷ்வந்த் மீதான கோபம் புகைந்து கொண்டு தான் இருக்கிறது. சட்டத்திற்கும், நீதிமன்றத்துக்கும் தெரியுமோ, தெரியாதோ? தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போதே, அவனுக்கு அந்தத் தண்டனை எல்லாம் போதாது. அதை விடக் கடுமையான தண்டனை ஏதாவது தரப்பட வேண்டும் என்று வார்த்தைகளாலும், மனதளவிலுமாகப் பொங்கிப் புழுங்கிய பெற்றோர் பலருண்டு. இந்நிலையில் தொடர்ந்து குழந்தைகளுக்கெதிரான பாலியல் வக்கிரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் நீதிமன்றம்........

© Dinamani