We use cookies to provide some features and experiences in QOSHE

More information  .  Close
Aa Aa Aa
- A +

ஆபத்துக்குப் பாவம் உண்டு!

7 0 0
14.09.2017

'ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று கூறுவது முன்னோர் முதுமொழி. யாராவது ஆபத்தில் இருக்கிறார் என்றால், அவர் யார்? எவர்? எப்படிப்பட்ட குணமுடையவர்? எந்த சாதி? எந்த மதம்? என்றெல்லாம் பார்க்காமல் உடனடியாக அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்; இதில் பாவ-புண்ணியம் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முதுமொழியைச் சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
அவர்கள் கூறியதை இன்றைக்கு நம்மால் சில நேரங்களில் கடைப்பிடிக்க முடிகிறதா? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நடைமுறைக்கு இது சாத்தியமில்லை என்றே பலரும் கூறக்கேட்க முடிகிறது.
காரணம், எல்லாவற்றிலும் துரிதத்தைக் கையாண்டு, துரிதமாகவே இவ்வுலகை விட்டுச் சென்றிவிடும் காலச்சூழ்நிலையில் இருக்கிறோம். அதில் மேற்கூறிய முதுமொழியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் சாலை ஓரங்களில் சிலர் நின்றுகொண்டு கையைக் காட்டி, 'லிப்ட்' கேட்கும் பழக்கத்தை பார்க்க முடிகிறது. ஆபத்தில் இருப்பவர், அவசரமாகச் செல்ல வேண்டியவர், வாகனம் பழுதானவர், முதியவர், பேருந்தைத் தவறவிட்டவர் என்று யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானலும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இப்படிக் கேட்பவருக்கு 'ஆபத்துக்குப் பாவமில்லை' என்று சிலர் இரக்கப்பட்டு உதவி செய்கிறார்கள். ஆனால், அந்த உதவியே அவர்கள் உயிரைப் பறிக்கும் எமனாகவும் சில........

© Dinamani